என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாரணாசி பாலம் விபத்து
நீங்கள் தேடியது "வாரணாசி பாலம் விபத்து"
உ.பி. மாநிலம் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியான நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். #VaranasiFlyoverCollapse #PMModi
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழ் காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது சடலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரு.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேம்பால விபத்து தொடர்பாக இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. #VaranasiFlyoverCollapse #PMModi
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Varanasiflyovercollapse
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. மேலும், அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி பலரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகின.
இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்-ஐ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு 250 வீரர்களை கொண்ட தேசிய பேரிட மீட்பு படையினரை அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. #Varanasiflyovercollapse
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X